இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, November 29, 2011

உயிர்பிழைத்த நாளன்று....

அன்பனும் என்நண்பனும் 
வாவென்று வங்கக்கடலை நோக்கி 
வெறுத்த போதும் வர மறுத்தபோதும் 
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம் 
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று 
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று 
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு 
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர் 

காணுமிடமெல்லாம் நீராகி 
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி 
கால்களையும் கைகளையும் 
வீரங்கொண்ட விசையுடன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 


வயிற்றினுள் பலமடங்கு நீரும் 
கடலின் உவர்ப்புச்சுவையும் 
குமட்டலுடன் சுவாசமும் முட்ட 
இறைவனே என்னை காத்திடு என்று 
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு 
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி 
பலமுறை நிலத்தில் அடித்து 
து....வென்று துப்பியது தரையில் 

பேச்சிழந்து மூச்சிழந்து 
பலமணிநேரம் தரையில் கிடந்து 
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று 
வைத்துக்கொண்டேன் வைராக்கியம் 
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று 
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று 



படம் தந்த கவிதையிது சில உண்மைகளுடன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று...
அருமையான வரிகள். பகிர்விற்கு நன்றி. நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

சிந்தையின் சிதறல்கள் said...

@திண்டுக்கல் தனபாலன்

மிக்க நன்றி தோழரே....

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...