முல்லைப்பெரியார் அணையென்று
முனைப்புடன் மோதல்கள் ஆங்காங்கு
அரங்கேற்றம் நிகழ்ந்துவிட்டது
அரசுகளின் அசமந்தம் எங்கு
அழைத்துச்செல்லவிருக்கிறதுவோ
ஆழ்ந்து சிந்திப்பீராக
கடந்தகாலங்களில் கற்றிருக்கும்
கறுப்பு நிகள்வுகளின் கண்ணீர்கள்
இன்னுந்தான் ஓயவில்லை
கருத்துகளோடும் குரோதங்களோடாகும்
குதர்க்கத்தின் வடுக்களெல்லாம்
விதைத்துவிடும் ஓர் அழிவுநோக்கி
வீணர்களின் விவேகமற்ற செயலும்
வாலிபர்களின் வீரவிளையாட்டுகளும்
வலிந்து வரளைத்துக்கொள்ளும்
வலிதீராப் பகையினையும்
ஆண்டாண்டுகால அழிவினையும்
சீர்தூக்கி சிந்திப்பீராக...
அயல்தேசத்தின்(SL) மூன்று தசாப்த்தம்
முடியமறுத்த இனக்கொலைகளாலும்
சமரசமற்று முடிந்துபோன நம்பிக்கைகளும்
எத்தனை அப்பாவிகளின் வாழ்வை
சீரழித்திருந்ததென்பதை மீட்டிப்பாரீர்
சீறும் சினங்கொண்டு
சீர்செய்திடமுடிவதில்லை
பொதுச்சேவைநோக்கமென்று
பொல்லாதவராய் நடப்பதெதற்கு
தேசம் ஒன்றினுள் பாகுபாடு உருவாக்கி
பாவிகளாய் ஆகிடாதீர்
உயிரென்ற பொதுவுடமை
எங்கிருப்பினும் காத்திடனும்
மலையாளி தமிழனென்று
மிதிக்கிறார்கள் வீதிகளில்
புகைகின்ற சிறுநெருப்பும்
சினங்கொள்ளுமுன் அணைத்திடனும்
முல்லைப்பெரியார் அணைகொண்டு
காத்திடநினைக்கும் உயிர்களை
விதண்டாவாதங்களுடன் அணைந்திடாது
அரசுகளின் சமரசத்துடன் - முனைந்து
முடித்திடுங்கள் முழுவதையும்
வாழத்துடிப்பவன் வாழ்ந்திடட்டும்
2 comments:
நன்றாக இருந்தது தோழர்..
தலைப்பும் அருமை. கருத்தும் அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
Post a Comment