கணவனிழந்த என்தாயும்
பசியோடழுத சகோதரங்களும்
ஏக்கத்தோடழுதிருந்தார்கள்
வாலிபமட்டுமே மூலதனத்துடன்
வாழ்வளிக்க வழி தேடிநின்றேன்
அழகுசிலையென்றார்கள்
அந்தரத்தில் பறந்திருந்தேன்
இளமையில் அனுபவியென்றார்கள்
இன்பத்துடன் இணைந்திருந்தேன்
அங்கம் மின்னுகிறதென்றார்கள்
அனுபவித்திட பணம் பெற்றிருந்தேன்
பணமுன் தேவையென்றார்கள்
பக்கவிழைவு மறந்திருந்தேன்
நிழல்களையெனக்கு காட்டினார்கள்
நிஜங்களையெல்லாம் மறந்திருந்தேன்
சுகமொன்று தந்தார்கள்
சுமைகளை நானே தாங்கிநின்றேன்
வேதம்பல பேசுகிறதென்றார்கள்
வேதனை மட்டும் நோக்கியிருந்தேன்
காம வேடர்கள் வலை வீசினார்கள்
காதலென்றதை ஏற்றிருந்தேன்
எதிர்காலமொன்று இருக்கிறதென்றார்கள்
எதிர்கொள்வேனதை என்றிருந்தேன்
குடும்பமோ என்றும் மகிழ்ந்தார்கள்
உடலின் குறையதிகம் உணர்ந்திருந்தேன்
வயதும் உனையடைந்ததென்றார்கள்
வறுமையெனக்கென்று அழுதேன்
வாடிக்கையாளர் வேண்டாமென்றார்கள்
வாழ்வையே நான் தொலைத்து நின்றேன்
காண்போரெல்லாம் உமிழ்ந்தார்கள்
காரணமின்றி அழுது நிற்கிறேன்
வாழத்தகுதியற்ற பாவியென்றார்கள்
முடிவுறும் வாழ்வுக்காய் ஏங்கிநிற்கிறேன்
கரு தந்த நண்பனுக்கு நன்றி
4 comments:
மனதை பாதிக்கும் வரிகள்...
சிறப்பாக அமைந்தது..
வாழ்த்துக்கள்...........
நிழல்களையெனக்கு காட்டினார்கள்
நிஜங்களையெல்லாம் மறந்திருந்தேன்
சுகமொன்று தந்தார்கள்
சுமைகளை நானே தாங்கிநின்றேன்
இப்படித்தான் எல்லா விலைமாதுக்களின் மனநிலையும்..நன்று..
ஆஹா. அசத்தலான பதிவு
அனைவருக்குமான வாழ்வின் நிலை தான் என்றாலும்
இத்தனை தெளிவாக அழகாக யாரால் சொல்ல முடியும் ?
சிந்தனைத் தெளிவிலும் வார்த்தைகளின் வண்ணங்களிலும்
மெய்மறந்து போனேன்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
ஆஹா! அருமை!
மனதை நெகிழச் செய்தது!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
Post a Comment