இளசுகளின் இன்பக்காதலை
இன்புறச் சுவைத்திருந்தோம்
இனியொரு பிறவியற்று - இணைந்தே
மடிந்திடவும் நினைத்திருந்தோம்
காதலர்களாய் வாழ்ந்த எம்
காதலுக்கொரு பரிட்சையாய் - எம்
செல்வங்களே எமக்கு
பரிட்சார்த்தம் நடத்துகின்றனர்
எம்காதலில் உருவானவர்கள்
எமக்கும் காதலை கற்றுத்தருகின்றனர்
இணைபிரிய மறுத்திருந்த எம்மை
பிரித்திணைத்தொரு காதலை
கண்டிடச்செய்கின்றனர்
பாசமாய் இருவார்த்தை
பரிவாயொரு முத்தம்
முழுவதுமாயடைந்திட
பகலிரவாய்த் தவித்திருந்தோம்
முதுமையிலும் காதலுண்டு
மனதிலும் இளமையுண்டு
மகிழ்வுதரும் வாழ்வுக்காய்
வாழும்போதே இறப்பதேன்
உன் மலர்ந்த நாளை
மறந்துவிட்ட மகன்களுக்கு - நாம்
மகிழும் நாளாய் கடத்தியிருந்தது
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இத்தனை நாள் இருண்டிருந்து
இன்றுமட்டும் புலரந்ததுபோல்
இன்பநாளாய் உனையடைந்தேன்
இன்பமானவளே நலந்தானா??
4 comments:
படமும் படத்திற்கான பதிவும் மிக மிக அருமை
காதலர்களுக்கு வயதாகும்
காதலுக்கு வயதாகுமா என்ன ?
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
@Ramani
மிக்க நன்றி கவிஞரே வருகையிலும் பதிலிலும் மகிழ்ந்தேன்
முதுமையிலும் காதலுண்டு
மனதிலும் இளமையுண்டு ..
சரியாகச் சொன்னீர்கள்..
வாழ்த்துகள்..
இறப்பதை எதிர்பார்க்கிறோம்
அருமையான வரிகள் நண்பரே!
காதல் இல்லாத ஒரு வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? இருக்கும் வரை காதல் இருக்க வேண்டும். (காதல்=அன்பு)
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
Post a Comment