இறைவன் படைத்த உயிர்
எமக்கெங்கே சொந்தமானது
உலக பயணத்திற்கு
பெற்றுவந்தோம் வாடகையில்
துன்பம் இன்பமென்று
வாழ்வு சாவென்று
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு
எம் பாதையில் கிடைத்த
செல்வமாய் பல உறவுகள்
உயிருள்ளவரை போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது
