மனிதனாய் பிறந்து
பசியால் மரணமென்று
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது
அருகதையற்ற அரசனாய்
ஆட்சிசெய்து கொள்ளையடித்து
சேர்த்துவைத்த செல்வமுனை
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை
போராட்டங்கள் போர்க்களமாகி
எரிகுண்டுகளுக்கு இரையானபோது
சொத்துகளும் சேதங்களும்
சோகங்களை தணித்திடவில்லை
இயற்கையில் அனர்த்தங்களாகி
நிலத்தினுள் மூழ்கடிக்கப்பட்ட
முதலீடுகளாலோ உடமைகளாலோ
அழிவை தடுத்திட முடிந்ததில்லை
படைத்த இறைவன்
காலத்துக்குக் காலம் உணர்த்திட
சோகங்களை சுமைகளாக்கியும்
உணரப்படாத உலகமிங்கு
விழிக்க மறுக்கிறது
ஆண்டியானாலும் நீ அரசனானாலும்
இறைவன் சன்னிதானத்தில்
உன்னாமம் சமமாகிறதே - மனிதா
மரணமுன்னை நெருங்குமுன்
மண்ணறைக்காய்த் தேடிக்கொள்
உன்னால் சேர்க்கப்படுபவை
சிதறடிக்கப்படுவதற்குள் - சிலாகித்துக்கிடக்கும்
உலக மரணங்களையாவது
சிந்தித்துக்கொள் சுவனம் நீயடைவாய்
2 comments:
அருமை! சகோ!
கவிதை அருமை!
வலைப் பக்கம் காணோம்!
புலவர் சா இராமாநுசம்
உங்கள் உள்ளத்து உணர்வுகளை நீங்கள் எழுதிய கவிதைகளில் கண்டேன் சிந்தனைச்சிறகுகளை
உலகளாவ பறக்க விட்டு மற்றவரின் மனதை கொள்ளை கொண்டு வந்துள்ளீர்கள்
சாகாப்பணியில் சிந்தனையை போட்டறிவுத்தாகத்தை
தீர்க்க துடிக்கின்றீர்!
வேகாது நும்முயற்சி வெல்வதற்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆசுகவி அன்புடீன்.
Post a Comment