இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 17, 2011

புறப்படு தோழா..... புறப்படு



தோழா இன்னுமா உறக்கம் உனக்கு
எப்போது விழிக்கப்போகிறாய்
உன் நிம்மதி குலைப்பதற்காய்
சேனைப்படைகளங்கு சேவைசெய்கிறது


எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அனியாயம் எம் கண்மணிகளுக்கு


உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
இன்னும் அச்சங்கொண்டடங்குவதா?? - புறப்படு
பொறுமைக்கொரு எல்லை வேண்டாமா??


அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும் 
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு



அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது


இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா - புறப்படு


என்ன கொடுமை செய்திருந்தோம் இவரக்ளுக்கு
என்ன தேவை கேட்டிருந்தோம் இவர்களிடம்
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...


ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - என்பதுபோல்
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
புறப்படு தோழா புறப்படு


யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும் 
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு 
அபையமளித்திட உன்னால் முடியும் 
இன்றுதன்னே புறப்படு 


அகிம்சைப்போராட்டமெனும் 
ஆயுதத்தைக் கையிலெடு 
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான் 
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும் 
புறப்படு தோழா இன்றே புறப்படு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல கவிதை பகிர்வு

தேனி"சூர்யா"பாஸ்கரன். said...

நீண்ட நாளுக்குப்பின் தங்களின் கவிதையை கண்டேன்..நம் கவிதை உலகின் மூலமாக. புறப்பட தயாரான உங்களின் வரிகள்..என்னை மிகவும் கவர்ந்தது..நல்லதொரு கவிபடித்த திருப்தி..அதோடு கலைஅண்ணாவுக்கு நீங்கள் எழுதிய கவியும்,கலைமூன்அண்ணாவுக்கு நீங்கள் எழுதிய கவிதையும் அருமை..நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாய் மீண்டும் சந்திப்போம்..வாழ்த்துக்கள்..நண்பா..

நண்பன் said...

அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது


இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா

உங்கள் உள்ளக் குமுறலை வெளிக்காட்டிய விதம் அருமை தோழா இனியும் வேண்டாம் பொறுமை புறப்படுவோம்
வெற்றி காண்போம் நன்றி நன்றி

ஜாஹீதாபானு said...

யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும்
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு
அபையமளித்திட உன்னால் முடியும்
இன்றுதன்னே புறப்படு
அனைத்தும் அருமையான வரிகள்

யாதுமானவள் said...

ஹாசிம் wrote:
[b

எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அநியாயம் எம் கண்மணிகளுக்கு


உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்

அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது

எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...

எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட

அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
[/b]


அருமையான கவிதை ஹாசிம்....
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட சரியான வார்த்தை...

எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - ---

அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது - நன்னாகச் சாடி உள்ளீர்.

உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் கவிதை.... இளரத்தம் பாய்கிறது கவிதையில்... வேகம்... விவேகத்துடன் சேர்ந்து .... வீறுகொண்டெழ வைக்கும் சூடான கவிதை இது....

வாழ்த்ஹ்டுக்கள் ஹாசிம் !

kitcha said...

தமிழனை,மனிதனை வீறு கொண்டு எழச் செய்யும் வலிமையான வரிகள்.
அசத்தலான பதிவு.

அய்யம் பெருமாள் .நா said...

தென் ஆப்பிரிக்காவில் சுரங்க தொழிலாளிகள் குறிப்பாய் பெண்கள் படும் துயரினை பாரதி கவிதையாய் எழுதியிருந்தான் (கரும்பு தோட்டத்திலே என்று ஆரம்பிக்கும்.) இதைப்போலவே

இலங்கையை குறிப்பிடாமல் அவர்களின் துயரத்தை படிமம் மற்றும் குறியீடுகளால் உணர்த்தியுள்ளீர்கள்.. அபாரம் தொடருங்கள்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...