நானென்ற அகம்பாவம்
நானென்றே.. நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை
நான்தான் சரியென்ற வாதம்
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது
காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை
திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை
புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை
நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்
5 comments:
அருமை.
நானென்ற அகம்பாவம்
நானென்றே.. நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை///
நச் வரிகள்... கவிதையும் அருமை.
நம்ம தளத்தில்:
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
தேடு மவளே தேடு இனி இந்த ஜென்னத்தில் உன் தேடலுக்கு விடை கிடைக்காது இருந்த போது ஏற்க மறுத்தாய் உன் வரட்டுப்பிடிவாதத்தால் அனைத்தும் உன்னை விட்டுப் பிரிந்த போது பார்க்கத்துடித்தாய் அதுதான் பரிதாபம்.
உன் நிலை கண்டு நானும் வருந்துகிறேன்
வரிகள் நச்சுன்னு இருக்கு ஹாசிம்
ஒன்று உள்ள போது நமக்கு தெரியாது அதன் பெறுமதி
அதற்கு உங்கள் வரிகள் சாட்சி ஹேட்ஸ் ஆப்ட் யு
இந்த கவிதையை எனது தளத்தில் வலையேற்றி இருக்கிறேன் அன்பு நண்பா!
வாழ்த்துக்கள் .....
சிறப்பான கவிதை!
அருமையான இக்கவிதையினை எனது வலைதளத்திலும் வலையேற்றி இருக்கிறேன் அன்பு நண்பா!
Post a Comment