உன் பேராசைகள் கண்ணை மறைத்திருப்பதால்
உம் பாதையின் படுகுழிகள் உமக்குத் தெரியவில்லை
சுற்றமும் சூழ்ந்த சுகந்தம் மறந்து
பாதாளம் நோக்கிய பயணத்தினைத்
தேர்ந்தெடுத்துக்கொண்டாய் மானிடனே!!
சமுதாயமென்று சமாதியாக்கப்பட்டது
சமூகமொன்று சீரழிக்கப்படுகிறது
சல்லாப வாழ்வைத்தேடிய உன் வழியில்
சறுக்கல்களும் உள்ளதென்று மறந்ததேனோ!!
இன்றய பொழுதின் இன்பத்திற்காய்
எதிர்காலத்தினை அடகுவைத்து
ஆசைகளின் ஈர்ப்பில் கவர்ந்து
அடியோடு உனை அழித்திடத்துணிகின்றாய்
