இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 19, 2011

தீயசெயல்கள் தீயாகிறது


தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு 
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது 
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை 
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை 

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும் 
பாதகங்களற்ற செயல்கள் மறந்து 
வளரும் முளையினை தளிரும்போதே 
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள் 

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில் 
தனைமறந்த குழந்தை  கவ்வும்போது 
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல் 
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு



மது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய் 
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி 
இளமனதுக்குத் தீயிடுகின்றனர் 

சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி 
காமத்தின் கழியாட்டங்களையும் 
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து 
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர் 

இத்தனை தீகளுக்கு நடுவே 
இடைவிடாத இன்னலுற்று 
வளர்ந்துவந்த மனிதனால் 
சமூகமெங்கே நன்மைபெறும் 

குழந்தைக்கு சுதந்திரம் 
அவனின் முன்னேற்றத்திற்காய் 
அமைந்திடட்டும் 
குழந்தையின் முன்னால் எம் செயல்கள் 
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

@கவி அழகன்

மிக்க நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தற்போதைய சமுதாயத்திற்க்கு தேவையான கவிதை...

கதம்ப உணர்வுகள் said...

நல்லதொரு சமுதாயம் உருவாக்க நாம் வளர்க்கும் குழந்தைகள் கையில் தான் இருக்கிறது... எந்த குழந்தையும் பிறக்கும்போது ஒன்றுமே அறியாமல் தான் பிறக்கிறது, ஆனால் அந்த குழந்தையை நல்லபடி வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் ஆகிறது.... அப்படி நல்வழி வளர்க்காத குழந்தைகளின் எதிர்காலம் எப்படி வீணாய் போகும் என்பதும் ஒழுக்கத்துடன் வளர்க்கும் குழந்தைகளால் இந்த உலகமே சிறந்து தலை நிமிர்ந்து நிற்கும் என்பதையும் மிக அருமையான வரிகளில் இங்கு படைத்தமைக்கு என் அன்பு வாழ்த்துகள் ஹாசிம்..

Anonymous said...

கள்ளிப் பாலே மேலன்றோ-உம்
கவிதையும் படமும் சொலநன்றே
துள்ளித் துடிக்க வேண்டாமா-நெஞ்சம்
துயரில் வெடிக்க வேண்டாமா
வெள்ளிப் பணமா பெரிதாகும்-என
விரையும் மாந்தர் குரிதாகும்
எள்ளி நகைக்கும் எதிர்காலம்-குமுறும்
எரிமலை ஆகா வருங்காலம்

புலவர் சா இராமாநுசம்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...