காத்தால மாடுமேய்க்க போனவரை
கருக்கலிலும் காணலியே
பாழாப்போன காதலால
பகலிரவா தவிப்புத்தான்
ஆத்து மேட்டுக்கரையில
இந்த மனுசனின் இறுக்கத்தில்
இன்னுந்தான் கிறக்கமெனக்கு
பின்னால ஒடியாந்து முன்னால வச்ச முத்தம்
இச்சென்று இன்னுந்தான் கேட்குது
தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்
நல்லாத்தான் பாக்கிறாரு
கொஞ்சம் சினுங்கிறாரு
அதிகம் கொஞ்சுறாரு
என்னாளும் சந்தோசமாத்தான் இருக்குது
இருந்தாலும் என் வயிறு
வெறுமனத்தான் கிடக்குது
வெளியிறங்கிப் போனவரு
வரும்வரக்கும் ஏக்கந்தான்
பிள்ளகுட்டி இருந்திருந்திருந்தா
இவரெதற்கு நான்தேடுறன்
படைத்தவனே கண்திறந்து
எனக்கும் கருணை காட்டுவாயா?
குறிப்பு : முதல் தடவையாக கிராமிய பாணியில் முயற்சித்தேன் இக்கவிதையின் திருத்தம் எதிர்பார்க்கிறேன்
7 comments:
தொட்டவரை கட்டணும்ன்னு
நான் கொண்ட வைராக்கியத்தில்
என்னப்பன் வெறுப்பையும் மீறி
இந்தாளக் கைபிடிச்சன்
நல்லாயிருக்குங்க...
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
@vidivelli
மிக்க நன்றி நண்பரே
ரொம்ப நல்லா இருக்கு.. ஒவ்வொரு வரிகளும் உணர்வு பூர்வமாக இருக்கிறது..இது போன்ற கவிதைகளை உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறேன்..நன்றி..
நல்ல முயற்சி நண்பா கிராமிய சொற்கள் அசத்துது
கிராமிய பாடல் போல அமைத்திருந்தால் வாசிக்க வாசிக்க ஒரு உணர்வு ஏறும்
இரண்டாம் வரி முடிப்பில் ஒரே ஒலிநயம் தரக்கூடிய வசனங்கள் போட்டால் வாசிக்க பாடல் மாதிரி இருக்கும்
உதாரணம்
காத்தால மாடுமேய்க்க போனவரை
கருக்கலிலும் காணலியே
பாழாப்போன காதலால
பகலிரவா தவிப்புத்தான்
காத்தால மாடுமேய்க்க போனவரை
கருக்கலிலும் காணலியே ( எ )
பாழாப்போன காதலால
பகலிரவா தவிக்கிறேனே ( எ)
@கவி அழகன்
மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி தங்களின் அறிமுகம் கண்டு ஆனந்தமடைந்தேன் நன்றிகள்
பாட்டாலே கிராமத்துப் பாணியிலே பாடினீரே
கேட்டாலே செவியினிக்க கேள்வியேனோ தேடினீரே
ஏட்டாலே இதுபோல எழுதுங்கள் இன்னும் பல
தீட்டாத வயிரமது மின்னுவதா..? இல
அச்சமின்றி எழுதுங்கள்
புலவர் சா இராமாநுசம்
Post a Comment