உறக்கம் வேண்டுமெனக்கு
உயிரே எம்முலகம் அடைந்திட
நிதமும் உன் நினைவில் - கண்கள் தூங்க மறுக்கிறது
காரணமற்ற காரியங்களோடு
வாழ்நாட்கள் கழிந்துவிட
காவியங்கள் உருவான காதலுலகில்
எம் கனவுகளில் உருவான
உணர்வுகளைத்தேடுகிறேன்
உயிராய் இல்லாதபோதும்
எம்மால் ரசிக்கப்படும் தடங்களுக்காய்
ஏக்கங்கள் உருவாகிறதே...
உறவில்லா இவ்வுலகைவிட
உயிர்தேடும் அவ்வுலகம் சிறந்ததே...
1 comments:
சூப்பர் நண்பா
Post a Comment