அன்னையால் ஆனதெல்லாம்
அகிலத்தில் அடைந்திடமுடியாது
அம்மா உன் மௌனத்தில் - என்
அசைவுகளை மறந்துவிடுகிறேன்
உன்னாலான உருவத்திற்கு
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை
உறவுகொள்ள மறுப்பதேன்
அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன்
அரியபாசம் அவளும் எனக்களித்தாள்
அன்பில் சிம்மாசனம் நீயானபோது
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள்
வலது கண்ணாய்நீயிருக்க
இடது கண்ணாய் அவளிருக்கிறாள்
இருகண்களின் பார்வையும்
எனக்கல்லவா அவசியமாகிறது
உங்களையடைந்த மட்டில்
பாக்கியம் பெற்றவனாய்
உயிருள்ளவரை உயிராகவே
உளமாற நேசிக்கிறேனுங்களை
உலகத்து நடைமுறைக்கு
உகந்ததாய் எம்பயணத்தோடு
உங்களால் சுவனமடைந்திட
உதவிடுங்கள் என்னுயிர்களே....
4 comments:
நச் கவிதை
தாயும் தாரத்துக்கும் ஒரே இடம் கொடுத்துட்டா பிரச்சனையே வராது :)
@ஆமினா
மிக்க நன்றி சகோ
நல சிந்தனை .. வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்
Post a Comment