இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, April 19, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 11) 

காத்திராத காலம் கரைந்தோடியது

கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை

கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்தக் கறுப்புநாளை மறக்கவில்லை

அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை


விதியின் சதுரங்கமிதுவாவென்று
வானம் பார்த்து மல்லாந்திருந்த என்மனம்
அனாதையும் நான் அவஷ்த்தையும் நான்
விதவையும் நான் பாவமும் நான் என்று
கடந்தவைகளை அசைபோட்தை மறக்கவில்லை

என்துரதிஷ்டமா என்னைத்துரத்துகிறதென்று
வீட்டினுள் முடங்கிக்கிடக்கலானேன்
வீதியில் நடக்கும்போது உலகமே எனைப்பார்த்து
ஒதுங்கிப்போ... இப்பேதையை வி்ட்டு - என
நகர்வதாய் உணர்ந்தேனதை மறக்கவில்லை

கிடைத்தவற்றைக் கையிலெடுத்து
வீட்டைவிட்டு கால்போன போக்கெல்லாம்
நடக்கலானேன் என்னை மறந்து
அம்மாவென்ற அலறல் குரல்கேட்டு
திரும்பினேன் திடுக்கிடுகிறேன்
தனிமையில் தத்தளிக்கிறதோர் அனாதை
வாரியணைத்த போது தாய்மையுணர்ந்தேன்
அதை இதுநாள்வரை மறக்கவில்லை

தொடர்வாள் ................
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 13)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ஹேமா said...

ஆரம்பமே நெகிழவைக்கிறது கவிதை வரிகள்.தொடரலாம் அவளோடு !

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...