இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 31, 2011

றமழானே வருக றகுமத்தை தருக.....



அடைந்த வருடங்களெல்லாம் 
உனையடைந்திருந்தேனே!! 
கண்ணியமாய் உனையடைந்து - உன் 
கருணைபெற்று வழியனுப்பினேனோ.... 


உன் பற்றிய சரித்திரங்கள் பல்லாயிரம் 
உரைத்திடக்கேட்டிருந்தேனே......
உன் வழியில் என்னை நிலைநிறுத்தினேனா??
உன்னிடமே கேட்கத் தோன்றுகிறது 


செறிந்த றகுமத்திற்கு சொந்தக்காறராம் நீ 
சென்ற வருடங்களில் எனக்காக 
எத்தனை மடங்கு சேர்த்துவிட்டுச்சென்றாய் 
விடைதெரியாத கேள்விகளோடுள்ளேனே 



வலிமையற்ற மனிதனானவன் நான் 
வல்லவனுக்கான நோம்பினைச் சுமந்த 
றமழானே உன் வருகையால் 
உள்ளமது பூரிக்கிறது - இருந்தும் 
பயப்படச்செய்கிறது 


உனையடைந்தும் கைசேதமடைந்த 
கூட்டத்தைப்பார்த்தும் 
உன் மீது பரவிக்கிடக்கும்  
நன்மைக் குவியல்களைக் 
கண்டும் அடைந்திடாதோரைப்
பார்த்தும் பயப்படச்செய்கிறது 


உன்னையும் என்னையும் படைத்த 
இறைவனிடமே மண்டியிடுகிறேன் 
எங்களைக் காத்திடும் இறைவா 
அடைகின்ற றமழானையாவது 
சுவனத்தின் வாசலாக்கிடு யாறப்பே.....


வருக றமழானே வருக 
தருக றகுமத்தைத் தருக 
வெல்ல சுவனத்தை வெல்ல 
சந்தர்ப்பம் உன்னாலொரு சந்தர்ப்பம் 
தந்துவிட்டுச் சென்றுவிடு......
மகிழும் மனதுடன் 
மனதாற வரவேற்கிறேன் 
வருக றமழானே வருக 




அத்தனை அன்பர்களுக்கும் எனது றமழான் சிறப்புப்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் புனித றமழானை அடைந்து அதனூடாக சுவனம் அடைந்திட 
இறைவன் எமக்கு அருள்புரியட்டும் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

செய்தாலி said...

என் அன்புச் சகோதரா அருமை அருமை
ரமலான் மாத நோன்பு நோற்று எல்லாம் வலா இறைவன் அவன் கிருபை உமக்கு உண்டாகட்டும்

ஜெய்லானி said...

தலைப்பில் ரமலானே “வருக”ன்னு இருக்கனும் :-)

இனிய ரமலான் வாழ்த்துக்கள் :-)

Unknown said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

vidivelli said...

vaalththukkal....

Muhammed Faris said...

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.

தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


வாஞ்சையுடன் வாஞ்சூர்.

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...