இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, January 30, 2011

சென்றுவா மன்னவனே....

உனைத்தாங்குமிதயமாய்....
உன்னருகே நானிருக்க 
மன்னனுன் கலக்கத்தின் 
துயர்நீக்க வேண்டாமா...


காதல் வானில்
பட்சிகளாய் சிறகடித்தநாம்
பகலிரவு தாண்டியும்
இன்பங்களை சுவீகரித்தோம்..

Thursday, January 27, 2011

கரை சேரா ஓடங்கள்....


வேண்டும் ஈழமென்று
வேரூண்றிய உணர்வுகளோடு
பயணமொன்றாரம்பித்து
பாதிவழி செல்லுமுன்
சுழன்றடித்த சூறாவளியில் சிக்கிய
ஓடமொன்றங்கு தத்தளிக்கிறது

சமாதானமே தீர்வென்று
தார்மீகம் தவறவிட்ட
தலைவர் கூட்டங்களின்
தீர்மானக் கோப்புகள் மட்டும்
புளுதிபடிந்த நிரைகளிலிங்கு
கொட்டிக்கிடக்கிறது....

இருபக்க அடிகள் தாங்கி
இயல்பு வாழ்வே கேள்வியாகி
தீர்ந்துபோன கண்ணீர்களோடு
பல்லாயிரக்கணக்கான மனிதங்கள்
பகலிரவாயின்னும்
கரைசேரத்துடிக்கின்றனர்.....

Wednesday, January 26, 2011

துயில்கொள்ளத் துடிக்கிறது


ஓராயிரம் வரிகளோடு 
எழுதப்படாத உன்சங்கதிகளுக்கு 
சந்தமமைத்திடத் துடித்து 
நீயின்றிய துயரில் 
தடுக்கிறது மனம்....

சதிகார சஞ்சலங்களெமை 
மரணந்தராத வருத்தங்களோடு 
தினமும் மடிந்திட 
மங்கலமிசைக்கிறது...

பெற்ற வரங்களிதுதானென..
பேறுகளற்ற பயணங்களோடு 
துயர்தாங்கிய துரும்புகளாய் 
துயில்கொள்ளத் துடிக்கிறது 
உள்ளம் மட்டும்....

Monday, January 24, 2011

வேண்டுமெமக்கொற்றுமை....

கடந்த எம் காலத்தில் 
கற்றது அதிகமென
இழந்ததை மீட்டிடவும் 
இழப்பவை தவிரந்திடவும் 
வேண்டுமெமக்கொற்றுமை


வட்டமிட்டு தருணம்பார்த்து 
கொத்திச்செல்லும் பருந்துகளாய் 
அரசியல் நாமத்தோடும் 
அதிகார வல்லமையோடும் 
அன்னியமாய் காண்பித்துனக்கு 
அனியாயம் செய்கின்றனர்....

Sunday, January 23, 2011

உன்புன்னகை போதுமடி...

என் பூவிழியாளே...
மலர்ந்த உன் வதனத்தில் 
மிளிர்ந்த புன்னகை கண்டேன் 
உயிர்த்த நிலைகொண்டேன் 


பரந்த பூமியில்...
பாழடைந்த நிலையுணரந்து 
பஞ்சணை காணாத
பரிதாப நிலையடைந்தேன் 
மட்டற்ற சோகத்தில் 
மதிகிறங்கித் தவித்தேன் 
மின்னிய உன் புன்னகையில் 
மீழ்ந்தேன் உன்னிடமே..


வடிவுகளின் வண்ணமே
காதல் ஜாலம் காட்டினாய் 
கமலம் நீயாக மாறினாய்..
கன்னியுன் கருத்தாளமிகு
புன்னகை போதுமடி 
பூவுலகை ஆண்டிடுவேன்...

Monday, January 17, 2011

அரசியல் அனாதைகள்....நாங்கள் (தலைவர் ஹகீமை நோக்கி...)



ஆவலுடன் கட்சிவளர்த்து
சமூகத்தின் எழுச்சிக்காய்
ஒற்றுமையும் கண்டு
வீறுகொண்டெழுந்திட
விழுதுகளாய் பலம்கொடுத்து
மாற்றான் வசைகளும்
(காவல்)படைகளின் அடிகளுமாய்
தோள்மீது சுமந்து....
துயில் கொள்ள மறந்த
நண்மைகள் நோக்கிடாத
வாக்காளனாய் வலம் வந்தோம்...


பேறுகளடைந்தவன்
பேரெதிரியாய் மாறினான்
பேரம் பேசலோடு
பதவிகளும் அடைந்தான்
தலைவனிருக்கிறானென
தருணம் வருமென்று 
தவமிருந்த தளபதிகளிங்கு 
இன்னும் அனாதைகளாய் 
ஆதரவு நாடுகிறோம்..

Saturday, January 15, 2011

தாயன்புக்கீடேது....


விந்தென்ற அற்பமுனை
கருவாகத் தன்வயிற்றில் சுமந்து
தற்கொலைக்கீடாக..
உயிர்கொடுத்த உத்தமியவள் - தாய்

சேயாய் உனையேந்தி...
பொத்திவைத்துக் காத்துவளர்த்து
அகிலத்தில் நடமாடிட
அன்போடு வழிநடாத்தினாள்...

Thursday, January 13, 2011

பூட்டிய உன்மனது...

சித்தரிக்க முடியாத சிற்பம் நீ...
சிந்திக்கிறேன் உனைநினைத்து
மட்டற்ற மகிழ்வுநிலை நீயாகி
மழுங்குதடி என்மதியும் 

ஆண்மையில் பெண்மை படைத்த இறைவனும்  
உலகுக்குன்னால் ஆழுமை கொடுத்தான் 
உனையாள சக்கியுள்ள...
ஆண்களையும் ஆட்டிவைக்கிறாய்

Wednesday, January 12, 2011

வலிதீராத வாழ்க்கை...

அழுகிறது மனம் 
புரியாத வலியுடன் 
துடிக்கிறது தேகம் 
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள் 
புரியாத நிகழ்வுகளுடன் 
எரிகிறது அங்கங்கள் 
புரியாத வேதனைகளுடன் 


பிறந்தபோது அழுதிருந்த 
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த 
தந்தையின் கடன்.... 
பிரிந்தபோது அழுதிருந்த 
துணையின் கடன்..... 
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்..... 

Tuesday, January 11, 2011

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)



தாகம்தீர்க்கும் தண்ணீராய்
தலைகழுவும் வெண்ணீராய் 
சாரல்மழையின் துளிகளாய் 
சாந்தம் உன்நிலைகளிலென்றும் 


காலாகாலம் கனமழையாய் 
உன் அவதாரங்கண்டு
பூமித்தாயவளும் ஏற்கமறுத்துவிட்டாள்
அவள் மனனிறைந்த வாரிசாகினாய்..

Monday, January 10, 2011

நிஜமான நினைவுகள்....

அன்பே... நாமன்று
ஆற்றங்கரையில் ஆறமர்ந்து
ரசித்திருந்த நீர்குமிழிகளும்
நீரலைகளின் நயணங்களும்
எம்மை சில்லிட வைத்த தென்றலவளும்
வீற்றிருந்த மரநிழல்களோடு
இயற்கையாய் மலர்ந்த எம் காதலை
இயல்பாய் சரித்திரம் பேசுகிறது....

Wednesday, January 5, 2011

காமம் தேடும் காதல்.....


வாழத்துடிக்கும் வாலிபனே
உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு
காதலெனும் அழகுத்தேரினில் 
பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு


கன்னியொன்று என்றுகண்டு 
கண்ணடைத்து காதல் சொல்லி 
காமவலையில் கட்டுண்டு
காளையுனை அழித்திடாதே...

Monday, January 3, 2011

மனதின் தேடல்......(.....)

என்ன கொடுமையென்று யாரிடம்சொல்ல
எழுதாத தீர்ப்புகளாய் வாழ்வின் நிலை 
துடுப்புகள் இழந்து தத்தளிக்கும் 
படகுகளாய் மனங்களின் தவிப்புகள் 


சுதந்திரமிருந்தும் தடுக்கிறது மனம் 
காதல்கள் இருந்தும் வெறுக்கிறது மனம்
ஆசைகள் இருந்தும் அடக்கிறது மனம்
அத்தனையும் இருந்தும் ஏங்கிறது மனம்

Sunday, January 2, 2011

அன்பு ஒன்றே போதும்


வேண்டாத தேவைகள் 
வேண்டாமென்ற போதும் 
தேவைக்கதிகமாய் 
தொடர்கிறது என்றும் 


வேண்டுமுன் அன்பென
வேள்விகள் பல செய்தும் 
மனந்திருந்திடா மனிதமாய் 
மறுப்பதேன் கண்மணியே...

Saturday, January 1, 2011

சரித்திரம் படைத்திடலாம்....

சூழல் கற்றுத்தருகின்ற 
சங்கமத்தின் விழைவுகளையும் 
சரித்திரம் படைத்துவிட
ஆட்சியில் வென்றிடலாமே...


சாதாரணம் என்றிருந்து 
அசாதாரணமாய் மாற்றுகின்ற 
அரிய படிகளையும் 
குறிவைத்து நகர்த்திவிடு...


மனமென்ற எமதுள்ளம்
மகிழ்ச்சி நிலை கண்டுவிட்டால்
தெளிந்த உணர்வுகளுடன் 
தேறுகின்ற நிலைவருமே...





Related Posts Plugin for WordPress, Blogger...