பார்க்கத்தோன்றிய போதும்
பார்க்கமுடியாத துரதிஸ்டசாலியாய்
தொடர்ந்த கருவறை இருளோடு
போராடுகிறது கண்கள்
பல்லாயிரம் கண்களாய்
உணர்தலோடு பார்வைகள்
இருள் மட்டுமே உலகமானதில்
வேற்றுமைகள் தெரிவதில்லை
பார்க்கத்தெரிந்த மனிதனால்
பாவங்கள் அகற்றத் தெரியவில்லை
ஈனங்கள் நடப்பதறிந்து
பார்க்கத்தோன்றவில்லை
ஒளியுள்ள உலகில்
ஒளிர்கின்ற அனியாயங்களை
காண்பதில் கலங்குவதை...
மறுத்த இறைவனுக்கே புகளனைத்தும்
கண்கள் இளந்த ஒளிகளோடு
துலங்குகிறது என்னுலகம்
பார்வையிருந்தும் இளந்து
தவிக்கிறது இவ்வுலகம்
8 comments:
டும்டும்...டும்டும்...
கவிதை அருமை...
விழிகளை திற...
நாங்கள் விழியிருந்தும்
குருடர்களாய் தான்
இருக்கிறோம்...
///பார்க்கத்தெரிந்த மனிதனால்
பாவங்கள் அகற்றத் தெரியவில்லை ///
உண்மை தான்... மனிதர்களின் பார்வை ஊனமாகி உள்ளதால்...
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
கண்ணிருந்தும் குருடராய்ப் பலபேர்.. விழியில்லாமல் படைத்த விதியினுக்கு நன்றி சொல்லி மகிழும் சிலபேர்..
ஊனக்கண்களால் நாம் காணும் வெறுப்பேற்றும் செயல்களைவிட அவற்றைக் காண வழியில்லாது படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் போது இறைவனின் இக்கருணையைப் புகழ்வதா..? இல்லை நலமனைத்தும் படைத்து அதனைக் கண்ணுற்று பெரும் இன்பம் பெறும் வகையின்றிச் செய்து விட்ட இறைவனைச் சபிப்பதா..? என்பது தான் இங்கே பெரும் கேள்வி..
மிக அருமையான கவிதை படைத்து பெருமிதம் கொள்ள வைத்தீர் ஹாசிம்...
பாராட்டுகக்ள்...
காண்பதில் கலங்குவதை மறுத்த இறைவனுக்கே புகழனைத்தும்...
அசத்தல் வரிகளோடு கருத்து சொல்லும் மற்றுமொரு கவிதை....
கருத்தின் தொனி நச் நச் என்று மண்டை இடியாக இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.....
பார்வை இருந்தும் பயனேது ஜனங்களே
என்ன நல்லதை செய்தீர்கள் பார்த்தீர்கள்?
பார்வை இழந்தாலும் தொடுதல் உணர்வால்
எங்களுக்கு இருக்கும் இந்த நல்ல செயல்கள்கூட
உங்களால் செய்ய முடியவில்லையே....
பார்வை இருந்து இப்படி உலகத்தை பயனற்று பார்ப்பதைவிட
இறைவன் பார்வை மறுத்ததற்கு கோடி நன்றிகள் என்று அருமையான அசத்தல் அட்டகாச வரிகளோடு கவிதை அமைத்தமை அழகு ஹாசிம்....
அன்பு வாழ்த்துக்கள் தம்பி....
//பார்க்கத்தோன்றிய போதும்
பார்க்கமுடியாத துரதிஸ்டசாலியாய்
தொடர்ந்த கருவறை இருளோடு
போராடுகிறது கண்கள்//
அசத்தல் வரிகள்...!!! ரொம்ப நல்லா இருக்கு!!!
கண்கள் இருந்தும் பார்வையற்ற குறுடர்களாய் இன்று மானிடர்கள்
உங்கள் கவி வரிகளின் அர்த்தம் விரிவானது வாழ்த்துக்கள் ஹாசிம்
மிகவும் அருமையான சொல்லாடல்கள் சகோ.
இறைவன் நம்மை காத்தருளவேண்டும்.
பார்வைகளிருந்தும் பயனில்லையோ
பாவங்கள் நிறைந்த பூமியிலே!
கண்கள் இள[ழ]ந்த ஒளிகளோடு
துலங்குகிறது என்னுலகம்
பார்வையிருந்தும் இள[ழ]ந்து
தவிக்கிறது இவ்வுலகம்
சிறுபிழை மாற்றிவிடுங்கள் சகோ..
ஒளியுள்ள உலகில்
ஒளிர்கின்ற அனி[நி]யாயங்களை
காண்பதில் கலங்குவதை...
மறுத்த இறைவனுக்கே புகள[ழ]னைத்தும்
Post a Comment