நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
காண்பவைகளை கற்கத்துணியும்
கன்னி உள்ளமதில்
கருத்தாளம் உன்தவறில்
கலங்கிறது நீயறியாமல்..
அந்தரங்க அனர்த்தங்களையும்
அப்பாவிக் குழந்தைமுன்
போராட்டக் களரியாக்கி - உங்கள்
அன்னியோன்யம் மறந்ததேன்
நீசெய்தாய் இதுவென்றும்
நான் செய்தேனா அதுவென்றும்
கடந்தவைகளின் சம்பாசனையால்
கண்டபயன் ஏதுமுண்டோ...
ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் .....
7 comments:
//
ஒருகை தட்டிப்பார்
ஓசைஏதும் கேட்டதுண்டா
உன்னவனே(ளே) உரைக்கிறானெ(ளெ)ன்று
உளம் சாந்தி கண்டுபார்
நீயா......நானா என்பதை
அடியோடு மறந்திடுவாய் .....//
அனைத்து வரிகளும் சிந்திக்க தூண்டுகிறது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
எத்தனை அருமையான கருத்து சொல்லும் கவிதை...
சின்ன வயசு தானே ஹாசிம்... ஆனாலும் எத்தனை பண்பான வார்த்தைகள் வருகிறது கவிதையில்.... மனம் பண்பட்டோர் பிள்ளைகள் எதிரில் தாய் தந்தையர் சண்டை போட்டு வீட்டை போர்க்களமாக்கி பிள்ளைகளின் மனதில் நிம்மதியில்லாது செய்யும் பெற்றோரே அவர்கள் வருங்காலம் மனதில் வைத்து விட்டுக்கொடுத்து அன்புடன் போனால் நாமும் நலம் நம் பிள்ளைகளும் நலம் நம் சந்ததிக்கும் நலம்.... நாம் நலம் பெறும்போது வீட்டை உயர்வாக சொல்வார்கள் வீட்டிலுள்ளோர் அன்பாய் இருக்கும்போது தெருவில் உள்ளோர் பெருமையாய் கூறுவர்.. இப்படி எல்லோருமே இருந்துவிட்டால் நம் நாட்டையே உயர்த்தி சொல்வர்....
சின்ன விஷயம் தான் என்று ஒதுக்காமல் அழகிய கருவாக்கி அதில் நல்லதை எல்லோருக்கும் வரிகளில் கவிதை அமைத்து வித்தியாச சிந்தனையுடன் நீயா நானா என்று சொல்லி இருப்பது அருமை ஹாசிம்... என் அன்பு பாராட்டுக்கள்பா..
நீண்டநாள் இடைவெளியில் நல்லதொரு கவிதை - மனிதநேயமாய் மிளிர்கிறது நண்பரே. வாழ்த்துக்கள்.
பெற்றோர் பிள்ளைகளின் வ ழிகாட்டிகள். .........
நீயென்று நானென்று
நாம் செய்யும் கலகத்தில்
பிஞ்சு உள்ளமதில்
நஞ்சு விதைகிறது
...................................................
உண்மை கருத்து .
பலர் பெற்றோரை சென்றடயனும்
ஓவ்வோறு குடும்பத்திலும் இருக்கும் பிரச்சனை...
அதை கவிதையில் சொன்ன விதம் அருமை..
என் பாராட்டுக்கள்..
nice
Post a Comment