கைவிட்ட கணவனும்
கைநழுவிய உறவுகளென
தனிமை தந்த வாழ்வுடன்
எதிர்நீச்சல் ஆகிறதென் நாட்கள்
தான்கொண்ட வேதனை
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற
சுமந்தனன் முதுகிலே....
கடப்பாறை கைபிடித்து
கடினபணி செய்துவிட்டு
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன்
வாழ்வோரெல்லாம் வாழுகிறார்
வாடும்நெஞ்சம் அழுகிறது
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...
எத்துயர் அடைந்தபோதும்
உன்துயர் தீர்த்திடவும்
உலகத்துத் தீர்ப்புகளுக்கு
துணிந்து (சாவு)மணி அடித்திடவும்
உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்....
5 comments:
அழும் தேம்பல் நம்மைச் சுற்றி...மனம் கலங்குகிறது.. என்று ஏற்றம் வரும் ஏழை என்பது மாறும்? நன்றாக உள்ளது ஹாசிம்.
உன்தாய் நானிருக்கிறேன்
எழுந்து நீயும் செல்மகளே....
ஏழை என்றநாமம் உடைந்தெறிந்து
ஏற்றமெமக் கேற்றிடுவோம்..../
தன்னம்பிக்கை தரும் வரிகள்.
ஏழை என்ற நிலை மாற
ஏற்றமான எண்ணம்
எண்ணத்தில் குடி கொள்ள
ஏற்றம் நிச்சயம்.
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை!
வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
வலி(மை)யான கவிதை. வாழ்த்துக்கள்.
Post a Comment