ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்
சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து
அழகிய பொக்கிசம் ஈகரை
ஆழம் நிறைந்த சமுத்திரம்
இன்பமாய் உருவாக்கிய
ஈகரை ஓடத்திற்கு
உறவுப்பாலமமைத்ததில்
ஊக்கம் கொண்ட
எமது அருமை உறவுகள்
ஏற்றம் கொள்கின்றனர்
இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது
உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...
நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமையாய் வாழ்க
மொத்தம் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க
1 comments:
உங்களின் வாழ்த்துக் கவிதையில் மனம் மகிழ்ந்தேன் ஹாசிம்!
Post a Comment