ஈராயிரத்துப்பத்து வருடங்கள்
ஒரு நொடியில் கடந்ததுபோல்
புத்தம் புதியதுவாய்
மலர்வதோடு மறைகின்றாய்
உன்னுள் அகப்பட்ட
உயிர்களின் அலறல்களும்
சீற்றங்களில் சிதறிய
மனிதர்களின் ஆசைகளும்
அங்காங்கே ஒலிக்கிறதே..

பசிக்குக் கையேந்திய
|
பச்சிளம் குழந்தைக்கு
|
இல்யென்று மனமும்
|
எப்படியப்பா சொல்கிறது
|
யாரோ விட்டதவறில்
|
வீதிக்கு வந்துவிட்ட
|
மனித(உன்)குலத்தின் அவலமிது
|
உன்கடமை மறந்துவிட்டாய்
|
ஏற்றத்தாழ்வு
|
இணைந்திருக்கும் வாழ்க்கையில்
|
ஏழை நிலை உணர
|
ஏனுள்ளம் நாடவில்லை
|
வாகனப் பவணியுன்
|
வருகையென்றும் நிலைத்திடுமா
|
வழியிலுள்ள ஓர்தடங்கல்
|
உன்நிலையும் மாற்றிடுமே...
|
நீயறியா கஞ்சத்தனமுன்
|
அகத்திரையினை மறைத்திருக்கு
|
கண்மூடும் வேளையிலே
|
கைசேதப் படுவாயே...
|
தயவுதேடுகின்ற ஓருயிரை
|
தத்தெடுத்தேனும் வழிசெய்திடு
|
தரணியில் பிறந்தபயன்
|
அடைந்தபலன்
கிடைத்துவிடும்
|